ஜம்முகாஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகர், லடாக் சாலைகள் மூடல்

டெல்லி: வைஷ்ணவ தேவி மலைக்கோயில் பாதையில் சீசன் தொடங்கி உள்ளது. ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காற்றின் தரத்தில் முன்னேற்றம் காணப்படுகிறது. அதே நேரத்தில், ஜம்முகாஷ்மீரில் இதமான சீசன் தொடங்கி இருக்கிறது.

கடுமையான பனிபொழிவு காரணமாக ஜம்முகாஷ்மீர், லடாக் சாலைகள் 2வது நாளாக மூடப்பட்டுள்ளன. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் 7வது நாளாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இமாச்சல பிரதேசத்தில் காலநிலை முற்றிலும் மாறியிருக்கிறது. மாநிலத்தின் பல பகுதிகளில் பனியும், மழையும் மாறி, மாறி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டெல்லியில் வெப்பநிலை 12 டிகிரி முதல் 19 டிகிரி வரை நிலவுகிறது. காற்றின் தரக்குறியீட்டிலும் முன்னேற்றம் காணப்படுகிறது.