ஜன. 7ல் காங். செயற்குழு: உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுமா?

சென்னை,

மிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 7ந்தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது.

தமிக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மேலிட தலைவர்  முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், முன்னாள் தலைவர் இளங்கோவன்  மற்றும் மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

இந்த கூட்டத்தில் தற்போதை தமிழக அரசியல் நிலவரம், மத்திய அரசின் மணமதிப்பிழப்பு குறித்தும்,  வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல் கூட்டணி , மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்ட தமிழக  உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்., கட்சிக்கு, 2 சதவீத இடங்களே ஒதுக்கப்பட்டதால், அக்கட்சி, தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதன் காரணமாக கட்சி தொண்டர்களிடையே அதிருப்தி நிலவியது.

இந்நிலையில்  தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதா என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்  ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதில் இருந்தே அதிமுகவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.