டில்லி: குறைந்த விலையில், ஜெனிரிக் மருந்துகளை விற்பனை செய்யும், ஜன அவுஷதி மருந்து கடைகளை, ரயில் நிலையங்களில்  திறக்க ரயில்வே துறை அனுமதி அளிக்க  இருக்கிறது.

மத்திய அரசு குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளை விற்பனை செய்யும் ஜன அவுஷதி மருந்து கடைகளை, நாடு முழுவதும் திறந்து வருகிறது. இதுவரை, 450 மாவட்டங்களில், 1,640 கடைகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.

இது குறித்து. மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் கடந்த மாதம் பேசும் போது, ‘ நாடு முழுவதும் உள்ள பெரிய ரயில்வே நிலையங்களில்,1,000 ஜன அவுஷதி மருந்துகடைகளை திறப்பது குறித்து, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் பேச உள்ளேன்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ரயில்வே துறையும், ஜன அவுஷதி மருந்து கடைகளை ரயில் நிலையங்களில் திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

திடீரென உடல் நலன் குன்றும் பயணிகளுக்கு இது உதவிகரமாக இருக்கும்.