ஜெயம் ரவி தற்போது ‘ஜன கன மன’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.அகமது இயக்கி வரும் இந்தப் படத்தில் நாயகியாக டாப்சி நடித்து வருகிறார். ஜெயம்ரவி ராணுவ வீரராகவும், சர்வதேச ஏஜண்ட் வேடத்தில் டாப்சியும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் இணைந்துள்ளார்.மேலும் ஈரானிய நடிகை எல்னாஸ் நோரோஸி இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் கிளன் போஸ்வெல் என்பவர் இணைந்துள்ளார்.

இந்நிலையில், இந்தப் படம் பாலிவுட்டில் வெளியான ‘பேபி’ படத்தின் ரீமேக் இல்லை என்றும், இது இயக்குனர் அஹ்மத் எழுதிய புதிய கதை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது ஒரு துப்பறியும் திரில்லர் படம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.