Random image

சட்டீஸ்கரில் மாயாவதியுடன் ஜனதா காங்கிரஸ் கூட்டணி….அஜித் ஜோகி முதல்வர் வேட்பாளர்

ராய்ப்பூர்:

சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்லில் பகுஜன் சமாஜ் வாடி கட்சியுடன் ஜனதா காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ராமன் சிங் உள்ளார். சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. பாஜகவை வீழ்த்த பகுஜன் சமாஜ் கட்சி, ஜனதா காங்கிரஸ் சட்டீஸ்கர் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாயாவதி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சட்டீஸ்கரில் பகுஜன் சமாஜ் கட்சி 35 இடங்களிலும், ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சி 35 இடங்களிலும் போட்டியிட உள்ளோம். இந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் அஜித் ஜோகி முதல்வராக பதவி ஏற்பார்’’ என்றார்.

இதுகுறித்து ஜனதா காங்கிரஸ் சத்ட்டீகர் கட்சி தலைவர் அஜித் ஜோகி கூறுகையில், ‘‘15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்களை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.