ஊரடங்கு உத்தரவு நேரத்தை நடனமாடுவதில் செலவிடும் ஜான்வி கபூர்….!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. ஏழை பணக்காரன் எனும் பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது மத்திய அரசு இன்றுடன் அந்த 21 நாட்கள் முடிவடைவதால் மேலும் இரு வாரங்கள் நீடித்துள்ளனர் .

இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர் . திரையுலகினர் பெரும்பாலும் சமூகவலைத்தளத்திலேயே தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .

ந்நிலையில், டான்ஸ் கிளாஸுக்கு போக முடியாததையடுத்து ஐஸ்வர்யா ராயின் உம்ரா ஜான் படத்தில் வந்த சலாம் பாடலுக்கு தான் முன்பு ஆடிய வீடியோவை ஜான்வி கபூர் வெளியிட்டுள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி, 2018 ஆம் ஆண்டில் கரண் ஜோஹரின் ‘தடக்’ மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

ஜான்வி கபூர் நடித்த முதல் படமான தடக் ஷூட்டிங் துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி ரிலீஸின் போது உயிருடன் இல்லை. ஸ்ரீதேவி இறந்தபோது ஜான்வி ஷூட்டிங்ஸ் பாட்டில் இருந்தார்.