தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹிரோக்களுடன் நடித்தவர் கீர்த்தி சுரேஷ் . சிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை அனைவருடனும் நடித்த இவர் தெலுங்கு, மலையாளம், என்ற மொழிகளில் தொடர்ந்து நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கீர்த்தி நடிக்கிறார்.

ஸ்ரீதேவியின் மகள் மற்றும் நடிகையுமான ஜான்வி கபூர் இன்ஸ்டிராகிராமில் ‘ நீங்கள் நடித்த மகாநதி படத்திலிருந்து உங்கள் நடிப்பை கண்டு வியந்து வருகிறேன். மேலும் எனது அப்பா தயாரிக்கும் படத்தில் நீங்களும் ஒரு அங்கம் என்பது எனது மகிழ்ச்சியை அதிகரித்துள்ளது. உங்கள் இந்தி திரைப்பட உலகிற்கு வரவேற்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.