ரும் 2017 ஆங்கில வருடப்பிறப்பு, மற்றும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் திருமலைக்கு வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வரவேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து அன்னமய்யா பவனில் நடந்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.  இதன் பிறகு தேவஸ்த்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜூ கூறுகையில், வரும் 2017 ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு பிறப்பு அன்றும், , 8ம் தேதி வைகுண்ட ஏகாதசி, மறுநாள் துவாதசி அன்றும் திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோயிலின் சொர்க்க வாசல் திறக்கப்படும். இந்த நாட்களில்  நாடுமுழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருவார்கள்.
ஆகவே, சாதாரண பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குவோம்.  இதனால் அந்த நாட்களில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு எந்தவித தனி ஏற்பாடும் தரிசன வசதிகளும் செய்ய இயலாது. ஆகவே  தயவுசெய்து இவர்கள் திருமலை வருவதை தவிர்ப்பது நல்லது என்று தெரிவித்தார்.