ஜனவரி 11: துபாய் வாழ் இந்தியர்களுடன் ராகுல் மெகா சந்திப்பு!

சென்னை:

ந்திய நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், வெளி நாடு வாழ் இந்தியர்களை சந்திக்கும் விதமாக ஜனவரி 11, 12ந்தேதி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதன்படி  ஜனவரி 11-ம் தேதி துபாய் வாழ் இந்திய மக்களை சந்திக்கிறார். துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராகுல்காந்தி சந்திப்புக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மாபெரும் சந்திப்பு கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, மக்கள் விரோத சக்திகளின் பிடியில் இருக்கும் நமது தேசத்தை காக்க வேண்டும் என்றும் உங்களின் ஆலோசனைகளையும், ஆதரவினை ராகுல்காந்தியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாபெரும் சந்திப்பு கூட்டத்தில் லட்சக்கணக்கான இந்திய மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக  சார்ஜாவில் உள்ள இந்தியன் சோசியல் மையத்தில் அமீரக கேரள மாநில காங்கிரஸ் கட்சியினர் கலந்துரையாடல்கள் கூட்டத்தை   நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் அமீரகத்தில் இருக்கும் பல மாநில காங்கிரஸ் அமைப்பினரும், தமிழக காங்கிரஸ், அமீரக காயிதே மில்லத் பேரவை, அமீரக திமுக பிரதிநிகளும் கலந்து கொண்டு, ராகுல் காந்தியின் துபாய் பயணத்தை வெற்றிப்பயணமாக்கும் நிகழ்ச்சி குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி சார்பில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கிளை சாம் பிட்ரோடா தலைமையில் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பயண திட்டத்தின்படி, ஏற்கனவே ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ராகுல் பயணம் மேற்கொண்டு அங்குள்ள இந்தியர்களை சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் தற்போது,  ஜனவரி 11,12-ம் தேதி ஐக்கிய அமீரக நாடுகளுக்கு பயணமாக இருக்கிறார். அதன்படி,  ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். மறுநாள் ஜனவரி 12-ந்தேதி அபுதாபிக்கு சென்று பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

மத்திய கிழக்கு நாடுகள், வளைகுடா நாடுகளிலும் ஏராளமான  இந்தியர்கள்  அனைத்துத் துறைக ளிலும் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக தென் இந்தியர்கள்  அதிக அளவில் வளைகுடா நாடுகளில் உள்ளனர். அவர்களிடம் கலந்துரையாடல் நடத்துவதன் மூலம் தென் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி  அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தில் ராகுல்காந்தியின் சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dubai cricket Stadium, DUBAI NRI', January 11th, mega meet, rahul gandhi, rahul gnadhi meeting, Rahul meets with Dubai Indians, ஐக்கிய அரசு நாடுகள், ஜனவரி 11, துபாய், துபாய் வாழ் இந்தியர்கள், மெகா சந்திப்பு, ராகுல்காந்தி
-=-