நாளை வாழப்பாடியார் 80வது பிறந்தநாள்: காங்கிரஸ் தொண்டர்களுக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் அழைப்பு

சேலம்:

றைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ.ராமரூத்தயின்  80வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் அர்த்தனாரி அழைப்பு விடுத்துள்ளர்.

தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில், வாழப்பாடியைச்  சேர்ந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி, 6 முறை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள காவிரி பிரச்சினைக்காக தனது மத்திய அமைச்சர் பதவியை உதறி தள்ளி தமிழக விவசாயிகள் மனதில் நீங்க இடம் பிடித்தவர். அவரது 80வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னை மந்தவெளியில் உள்ள ராஜீவ் பவனில் அமைக்கப்பட்டுள்ள வாழப்பாடியார் சிலைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் உள்பட முக்கிய தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். அதுபோல, சேலத்திலும் வாழப்பாடியார் பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி, விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சரும் , முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான  தலைவர் திரு வாழப்படியார், அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை(18.01.2020) காலை 9 மணி அளவில் வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு தலைவர்  வாழப்படியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்படும். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படும். பின்பு வாழப்பாடியார் திருமண மண்டபத்தில் அமைந்துள்ள தலைவர் வாழப்பாடியார் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி