தொடர்ந்து இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அஜித்தின் 60 வது படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக திகழும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஜான்வி ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’,புகழ் விஜய் தேவரகொண்டா இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறாராம். இந்த படத்தில் தான் ஜான் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.