இந்தியாவின் வெளிநாட்டு திட்டங்களுக்கு உதவும் தென் கொரியா மற்றும் ஜப்பான்

டில்லி

ந்தியாவின் வெளிநாட்டு திட்டங்களுக்கு ஜப்பான் மற்றும் தென் கொரியா நிதி உதவி செய்ய உள்ளன

சீனா ஒரு எல்லை ஒரு சாலை என்னும் திட்டத்தின் கீழ் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் உள்ள 60 நாடுகளை இணைக்கும் சாலை ஒன்றை அமைத்து வருகிறது.   இதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.    பாகிஸ்தான் உள்ளிட்ட ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த சாலை அமைக்க ஆதரவு அளித்துள்ளது.

இந்த சாலைத் திட்டத்தில் வரும் ஆப்பிரிக்க நாடுகளில் 18 நாடுகளுடன் இந்தியா நட்புறவில் உள்ளது.   இந்நாடுகள் காலனி ஆதிக்கத்தில் இருந்து வெளியேறி சுதந்திரம் பெற இந்தியா பேருதவி செய்துள்ளது.   அதனால் இந்நாட்டின் பல முன்னேற்ற திட்டங்களை இந்தியா நடத்தி வருகிறது.   இந்நாடுகளுடன் இந்தியாவின் நட்பைக் குலைக்கவே சீனா இந்த சாலை அமைப்பதை முன்னிறுத்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட சில வெளிநாடுகளின் இந்தியா நடத்த உள்ள திட்டங்களுக்கு ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள் நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.   கடந்த 2016ஆம் வருடம் நவம்பர் மாதம் இது குறித்து ஜப்பான் பிரதமருடன் இந்தியப் பிரதமர் மோடி பேசி உள்ளதாக கூறப்படுகிறது.   ஏற்கனவே இந்தியாவின் புல்லட் ரெயில் திட்டத்துக்கு ஜப்பான் உதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ஜப்பான் இண்ட்ர்நேஷனல் கார்பொரேஷன் ஏஜன்சி மற்றும் எக்ஸ்போர்ட் இம்போர்ட் பேங்க் ஆஃப் கொரியா ஆகியவைகளுடன் இந்திய அதிகாரிகல் அதிகாரபூர்வமற்ற சந்திப்புக்களை நிகழ்த்தி உள்ளனர்.   அப்போது  இவ்விரு அமைப்புக்களும் இந்தியாவுக்கு உதவி செய்வதாக தெரிவித்துள்ளன.    இது சர்வதேச சாலை அமைக்கும் சீனாவின் முயற்சிக்கு ஒரு பின்னடைவு என கூறப்படுகிறது.