வட கொரியா தீவிரவாத ஆதரவு நாடு : அமெரிக்கா அறிவிப்புக்கு ஜப்பான், தென் கொரியா பாராட்டு

--

சியோல்

மெரிக்கா வடகொரியாவை தீவிரவாத ஆதரவு நாடாக அறிவித்ததற்கு ஜப்பான் மற்றும் தென் கொரியா பாராட்டு தெரிவித்துள்ளன.

வட கொரியாவில் ஏவுகணை சோதனைகள் சர்வதேச தடைகளை மீறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அணு ஆயுத சோதனைகளும் நடந்து வருகின்றன.  இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பை முன்னிட்டு நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வட கொரியாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவித்தார்.  இதற்கு முன்பு ஈரான், சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை தீவிரவாத ஆதரவு நாடாக அறிவித்திருந்தது.

இது குறித்து ட்ரம்ப், “அமெரிக்க இன்று வடகொரியாவை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்கிறது.  இது சற்று தாமதமான அறிவிப்பு.  வடகொரியா மற்றும் அந்நாட்டுடன் தொடர்புடையவர்கள் மீது தடைகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படும்.” என தெரிவித்திருந்தார்.  அமெரிக்காவின் இந்த முடிவை ஜப்பான், தென் கொரியா மற்றும் போன்ற நாடுகள் பெரிதும் வரவேற்றுள்ளன.

ஆஸ்திரேலிய பிரதமர், “கிம் ஜாங் உன் சர்வதேச பயஙரவாத செயல்களை நடத்தி வருகிறார்.  அதில் ஆயுதக் கடத்தல், போதை மருந்துக் கடத்தல், சைபர் கிரைம்,  அணு ஆயுத அச்சுறுத்தல் ஆகியவைகள் அடங்கும்.  எனவே நாங்கள் அமெரிக்காவினிந்த நடவடிக்கையை முழு மனதுடன் வரவேற்கிறோம்.” எனக் கூறி உள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, “நா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன்.  இதன் மூலம் அணு ஆயுத உற்பத்தி வட கொரியாவில் முழுமையாக ஒழிந்து விடும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவும் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது.  இனி கொரியாவின் வடக்குப் பகுதியில் அணு ஆயுத தயாரிப்பு ஒரு முடிவுக்கு வரும் எனவும், அமெரிக்காவுடன் இணைந்து வட கொரியாவை ஒரு அமைதி நாடாக்க தென் கொரியா ஒத்துழைக்கும் எனவும் அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சகம் கூறி உள்ளது.