பதவி விலகும் ஜப்பான் நாட்டு மன்னரின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாட்டம்!

வயது மூப்பின் காரணமாக பதவி உலக உள்ள ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் 85வது பிறந்த நாளை அந்நாட்டு மக்கள் கோலாகலமக கொண்டாடி மகிழ்ந்தனர்.

jappan

ஜப்பானின் 125வது மன்னராக அகிஹிட்டோ இருந்து வந்தார். இவர் 80 வயதினை கடந்த நிலையில் வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மன்னர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுவரை ஜப்பான் நாட்டின் வரலாற்றில் எந்த மன்னரும் பதவி விலகியது இல்லை. முதல் முறையாக அகிஹிட்டோ பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டதும், மன்னர் பதவி விலகுவதற்கான மசோதா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மன்னர் பதவி விலகுவதற்கான நடைமுறை சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.

மன்னர் அகிஹிட்டோ 2019-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பதவி விலக உள்ளதாக பிரதமர் ஷின்சோ அபே ஏற்கெனவே அறிவித்திருந்தார். அகிஹிட்டோர் பதவி விலகிய மறுநாள் அவரது மூத்த மகன் பட்டத்து இளவரசர் நருஹிட்டோர்(58) மன்னராக முடிசூட்டப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தான் மன்னராக அரியணைந்தில் இருக்கும் போதே அகிஹிட்டோவின் 85வது பிறந்த நாள் ஜப்பானில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மன்னர் அகிஹிட்டோவை அந்நாட்டு மக்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், ஆசியையும் பெற்று சென்றனர். அதுமட்டுமின்றி, ஜப்பான் முழுவதும் ஆடல், பாடல் ம்ற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் தங்கள் மன்னர் பிறந்த நாளை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மன்னர் அகிஹிட்டோவின் பிறந்தநாளன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்கள் தங்களது வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.