கோமியத்தின் மூலம் உரம் தயாரித்து பெரும் பொருள் ஈட்டும் ஜப்பான் தொழிலதிபர்

சாகிகவா, ஜப்பான்

ப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு ஆர்கானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் கோமியம் மூலம் தயாரித்துள்ள உரத்துக்கு நல்ல கிராக்கி உள்ளது.

ஜப்பான் நாட்டின் வடக்குப் பகுதியில் ஏராளமான பால் பண்ணைகள் உள்ளதால் இந்த பகுதியில் ஏராளமான மாடுகள் உள்ளன.  இந்த பகுதியில் அமைந்துள்ள கான்கியோ டெய்சர் என்பவர் ஆர்கானிக் பொருட்கள் தயாரித்து வருகிறார்.  தற்போது ஆர்கானிக் பொருட்களைப் பலரும் விரும்பி வாங்கி வருவதால்  அவர் தனது உற்பத்திப் பொருட்களில் வேறு சில பொருட்களையும் சேர்க்க முடிவு செய்தார்.

அதையொட்டி  கான்கியோ டெய்சர் கோமியம் மூலம் உரம் தயாரிக்கத் தொடங்கினார்.  இவர் இந்த பகுதியில் உள்ள மாடு வளர்ப்போரிடம் இருந்து கோமியம் சேகரித்து அதைப் பதப்படுத்தி உரம் தயாரிக்கத் தொடக்கினார்.   அந்தப் பகுதியில் கோமியம் ஆற்று நீர் மூலம் மற்றும் தெளிப்பான் மூலம் ஏற்கனவே பயன்படுத்திய போதும் அதில் ஒரு துர்நாற்றம் இருந்ததால் பலரும் அதைப் பயன்படுத்த விரும்பவில்லை.

எனவே இந்த துர்நாற்றம் போக அவர் பல இயற்கை முறைகளைப் பயன்படுத்தி உரத்தைத் தயாரித்துள்ளார்.  இந்த உரத்துக்கு  சுச்சி கிகேர்ன் எனப்  பெயர் சூட்டி உள்ளார். இதற்கு நிலத்தின் மறுவாழ்வு எனப் பொருள் ஆகும்.   இந்த உரம் தற்போது ஜப்பான் நாட்டில் மிகவும் அதிக அளவில் விற்கப்படுகிறது.   அது மட்டுமின்றி வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட5 நாடுகளில் நன்கு விற்பனை ஆகி வருகிறது

இந்த் கோமிய உரம் மூலம் டெய்சர் பெரும் பொருள்  ஈட்டி வருகிறார்.  அத்துடன் இங்குள்ள மாடு வளர்ப்போருக்கும் கோமிய விற்பனை மூலம் நல்ல உபரி வருமானம் கிடைத்து வருகிறது.   கன்கியோ டெய்சர் இதைட் தவிர மொத்தம் 50 பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.  அனைத்தும் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஆகும்.