உலக கோப்பை போட்டியில் தோல்வி: ஜப்பான் கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு பெற முடிவு

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தோல்வி அடைந்ததன் எதிரொலியாக ஜப்பான் கால்பந்து அணியின் கேப்டன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்தார். ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் ஜப்பான் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதி சுற்றுக்கு செல்லும் முனைப்போடு ஜப்பான் அணி வீரர்கள் நாக் அவுட் சுற்றில் பெல்ஜியத்துடன் மோதினர். இந்த போட்டியில் ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்து கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
hasebe
இதையடுத்து ஜப்பான் அணியின் கேப்டன் மகோடோ ஹசீபே, தான் ஓய்வு எடுக்க விரும்புவதாக இன்ஸ்டகிராமில் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ இந்த உலக கோப்பையுடன் தேசிய அணிக்காக விளையாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். உலக கோப்பை தோல்வி எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது “ என்று குறிப்பிட்டிருந்தார்.

12 ஆண்டுகள் தேசிய அணிக்காக விளையாடிய ஹசீபே 2010, 2014, 2018ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் அணியை வழிநடத்தி சென்றார். 5 பயிற்சியாளர்கள் தலைமியில் ஹசீபே தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வந்தார்.

இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளில் ஜப்பான் அணி பங்கேற்க உள்ளது

கார்ட்டூன் கேலரி