கடந்த 10ஆண்டுகளில் முதன்முறையாக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை குறைத்துள்ள ஜப்பான் அரசு…

ப்பான் நாட்டில் கடந்த 10ஆண்டுகளில் முதன்முறையாக இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவலின் தாக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ள நிலையில்,தேசிய பணியாளர் அதிகார சபையின் பரிந்துரையை ஏற்று ,  ஜப்பானிய அரசாங்கம், கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக  தனது ஊழியர்களுக்கான போனஸை 2020 நிதியாண்டில் குறைக்க முடிவு செய்துள்ளது, , இந்த முடிவை  நடைமுறைப்படுத்து வதற்கான சட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டம்  டிசம்பர் மாத தொடக்கத்தில் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும் என்று அந்நாட்டு ஊடகமான  சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார சீரழிவை எதிர்கொண்டுள்ள நிலையில், ஜப்பான் நாடும் கடுமையான நிதிச்சிக்கலில் சுழன்று வருகிறது. இதை யடுத்து, நிதி தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து,  தேசிய பணியாளர் அதிகார சபை ஆய்வு செய்து அரசாங்கத்துக்கு பல பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

அதை ஏற்றுள்ள  ஜப்பான் அரசு  அரசு ஊழியர்களுக்கான போனஸ் தொகையை குறைக்க முடிவு செய்துள்ளது. அரசின் இந்த  புதிய சட்டம் மூலம், 2020 நிதியாண்டிற்கான தேசிய அரசு ஊழியர்களுக்கான ஆண்டு கோடை மற்றும் குளிர்கால போனஸ் 4.45 மாத சம்பளத்திற்கு சமமாக இருக்கும் என்றும், இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 0.05 மாத மதிப்புள்ள ஊதியங்கள் குறைவானது என்று தெரிவித்து உள்ளது.  இதன் காரணமாக ஆண்டு வருமானம் சராசரியாக 6.73 மில்லியன் யென் முதல் 21,000 யென் வரை  குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல தனியார் துறையிலும், போனஸ் அரசு ஊழியர்களை விட குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.

மேலும், தேசிய பணியாளர் அதிகார சபையின் பரிந்துரையில், ஜப்பானில், அரசு ஊழியர்கள்  வேலைநிறுத்தங்களில் ஈடுபடவோ அல்லது கூட்டுப் பேரம் பேசவோ அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அவர்களுக்கு உரிய சம்பள அளவு,  அவர்களின் ஊதியங்கள் மற்றும் போனஸின் அளவுகள் சார்பாக  முடிவு செய்யும் அதிகாரம்,  அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்திற்கே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.