இங்கிலாந்தில் பரவும் புதுவகை கொரோனா: வெளிநாட்டினர் நாட்டில் நுழைய ஜப்பான் தடை விதிப்பு

டோக்கியோ: வெளிநாட்டினர் ஜப்பானுக்குள் நுழைய அந்நாடு அதிரடியாக  தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் சில நாட்களாக புது வகை கொரோனா வைரஸ் அதி வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸானது முன்பிருந்த கொரோனாவை விட மிக எளிதில் பரவுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஆகையால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கிலாந்து நாட்டுடனான விமான போக்குவரத்தை துண்டித்து உள்ளன.

இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸின் பரவலை தடுக்கும் வகையில் ஜப்பானில் ஜனவரி இறுதி வரை வெளிநாட்டினர் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது,

சில நாட்களுக்கு முன்பாக பிரிட்டனில் இருந்து ஜப்பான் வந்த 5 பேருக்கு புதிய கொரோனா வைரசின் தாக்கம் இருப்பது உறுதியானது. டோக்கியோவிலும் இந்த புதிய வகை கொரோனா தொற்று சிலருக்கு உறுதியானது குறிப்பிடத்தக்கது.