ஜப்பான் நாட்டில் மீனவர்களின் வலையில் விசித்திர மீன் ஒன்று சிக்கியதால் உலகம் அழியப்போகிறது என்ற பீதியில் அந்நாட்டு மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.

deep

கடலின் மிக ஆழமான பகுதியில் வாழ்ந்து வரும் ஒருவகை மீன் தான் ஓர்ஃபிஷ்(oarfish). இது ஒரு விசித்திர மீன் என ஜப்பான் நாட்டு மக்களால் நம்பப்படுகிறது. ஏனெனில், கடலில் நிலநடுக்கம் ஏற்படும் போதும், சுனாமி ஏற்படும் போதும் தான் இந்த மீன் கரைக்கு வரும் என கூறப்படுகிறது.

ஏனெனில் கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானை தாக்கிய மிக பயங்கரமான சுனாமிக்கு முன்னர் இந்த வகை மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதுவரை அறியப்படாத ஒரு மீன் கரை ஒதுங்கியதால் ஜப்பான் மக்கள் அதனை வியந்து பார்த்தனர். அதன்பின்னர் தான் அந்த சுனாமி தாக்குதல் நடைபெற்றது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், ஜப்பான் மிகப்பெரிய பாதிப்பை அடைந்தது.

fish

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவ்வகை ஓர்ஃபிஷ் மீண்டும் கரை ஒதுங்கியுள்ளன. ஒருசில் மீன்கள் மீனவர்களின் வலையிலும் சிக்கியுள்ளன. ஆபத்தை அறிவிக்கும் இந்த மீன் மீண்டும் கரை ஒதுங்கியதை பார்த்த ஜப்பானியர்கள் உலகம் அழியப்போகிறது என்று கூறி வருகின்றனர். இது அந்நாட்டு மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.