ஜாங்டரி புயலால் இருளில் மூழ்கிய ஜப்பான்

--

டோக்யோ

ஜாங்டரி புயலால் ஜப்பான் நகரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

ஒவ்வொரு புயலுக்கும் பெயர் வைப்பது வழக்கம்.   அவ்வாறு ஜப்பான் கடற்கரைப் பகுதியில் தோன்றிய புயலுக்கு ஜாங்டரி எனப் பெயரிடப்பட்டது.   இந்த புயல் ஜப்பானை கடுமையாக தாக்கியது.  இதை ஒட்டி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என முன்னெச்சரிக்கை விடப்பட்டது.

ஜப்பானில் மணிக்கு 90 கிமீ வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியது.   இதில் பல மின்சாரக் கம்பங்கள் விழுந்தன.   அதை ஒட்டி மின்சாரம் நிறுத்தப்பட்டது.   ஜப்பான் நாடு முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது.   புயலை முன்னிட்டு பல இடங்களில் ரெயில் சேவையும் விமான சேவையும் நேற்றும் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூறாவளியுடன் கூடிய மழையினால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.  அதை ஒட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   நாடெங்கும் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.