ஜப்பான்: கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஜப்பானில் பெய்துவரும் கனமழையால் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் மேற்கு பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஜப்பான் தலைநகரான டோக்கியோ, ஷீரோஷிமா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சனிக்கிழமை ஹீரோஷிமாவில் பெய்த மழையில் 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
jappan
சாகா பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இதுவரை 15லட்சம் பேர் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் 30 லட்சம் பேர் வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலச்சரிவில் புதைந்தவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளையும், உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.