ஜப்பான்:

டுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை காணலாம் என்று நம்பிக்கை உடன் இருக்க வேண்டாம் என்று ஜப்பான் தனது ரசிகர்களை எச்சரித்துள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து பேசிய டோக்கியோ ஒருங்கிணைப்பு கமிட்டி சிஇஓ தோஷிரோ முட்டோ, கொரோனா பாதிப்பு அடுத்த ஜீலையில் கட்டுக்குள் வருமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இதனால் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா என்பது பெரிய கேள்வி குறியாகவே உள்ளது என்றார். 2020 ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

முட்டோ மேலும் தெரிவிக்கையில், 2021 விளையாட்டு போட்டிகள் நடக்குமா என்று உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும், அதை தெளிவாக தெரிவிக்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வேறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போது விளையாட்டு போட்டிகளை பார்க்கும் எண்ணமும் மக்கள் மனதில் இல்லை என்றும் முடடோ கூறினார்.

மாற்று வழியை சிந்திப்பதை விட்டு விட்டு,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழு மூச்சாக பாடுபடுவோம் என்றார்.

மனிதநேயதுடன் அனைத்து டெக்னாலஜி மற்றும் அறிவை பயன்படுத்தி கொரோனா சிகிச்சை, மருந்துகள் மற்றும் தடுப்பூசி போன்றவைகளை தயாரிக்க  ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.