டோக்கியோ:

ப்பானில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பாராளுமன்றத்தை கலைத்து பிரதமர் அபே உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பான் பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 22ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.  இதுகுறித்த அறிவிப்பை 25ந்தேதி ஷின்சோ அபே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜப்பான் பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அபே இன்று அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில்  ஷின்சோ அபேயின் சுதந்திர ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இதற்கிடையில், சமீபகாலமாக வடகொரியா தொடர்ந்து ஜப்பானை ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பிரதமர் அபே கடும் கண்டனத்தையும், வடகொரியாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

இதன் காரணமாக பிரதமர் அபேவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தினால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தலை அறிவித்து உள்ளார்.

அபே மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா என்பது அடுத்த மாதம் இறுதியில் தெரிய வரும்.