தெற்கு சூடான் அமைதிகாப்பு பணியை நிறுத்த ஜப்பான் முடிவு

டோக்கியோ:

தெற்கு சூடானில் 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிகாப்பு பணியை நிறுத்த ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. இதை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் வரும் மே மாதம் இதை புதுப்பிக்க வேண்டும். இதை புதுப்பிக்கும் திட்டமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

350 பேர் கொண்ட குழு தெற்கு சூடானில் சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் இந்த குழவினர் அங்கு சென்றனர். முதன் முறையாக பொது மக்களையும், ஐ.நா. ஊழியர்களையும் பாதுகாக்கும் வகையில் தனது உதவியை ஜப்பான் விஸ்தரிப்பு செய்தது.

‘‘உணவு மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை ஜப்பான் தொடர்ந்து வழங்கும். ஐ.நா அமைதிகாப்பு கமாண்ட் அலுவலகத்தில் சிலர் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் அபே தெரிவித்துள்ளார். தெற்கு சூடான் தற்போது நாட்டு கட்டும £னத்தில் புதிய கட்டத்தில் நுழைகிறது. அதனால் எங்களது உள்கட்டமைப்பு பணிகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம்’’ என்று அபே தெரிவித்தார்.

இந்த முடிவு தெற்கு சூடானில் உள்ள ஜப்பான் துருப்புகளின் பாதுகாப்பு நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்ற செய்தியை ஜப்பான் அமைச்சக முதன்மை செயலாளர் யோசிதே சுகா மறுத்துள்ளார். ‘‘வரிவான பரிந்துரைகள் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. மோசமான பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை. எங்களது சீரமைப்பு பணிகளை குறிப்பிட்ட அளவுக்கு முடித்துவிட்டோம்’’ என்று அவர் தெரிவித்தார்.

தெற்கு சூடான் அதிபர் சால்வா குர் செய்தி தொடர்பாளர் ஆடெனி வேக் ஆடெனி கூறுகையில்,‘‘ஜப்பானின் இந்த முடிவு குறித்து நாங்கள் அறியவில்லை. தெற்கு சூடான் அரசும், ஜ.நா.வும் இணைந்து இந்த முடிவை எடுத்திருப்பதாக டோக்கியோவில் தகவல் வெளியாகியுள்ளது என்று ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு சூடான் அமைதிகாப்பு பணி என்பது ஜப்பான் துருப்புகளுக்கு நீண்ட காலமானதாகும். கோலன் உச்சி, கம்போடியா உள்ளிட்ட பகுதிகளில் ஜப்பான் துருப்புகள் பணியாற்றி வருகின்றனர்’’ என்று அவர் தெரிவித்தார்.

தெற்கு சூடானில் நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், போர் கொள்கைகளுக்கு புறம்பாக ஜப்பான் துருப்புகளை அங்கு அனுமதித்திருப்பதாக கூறி அந்நாட்டு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஜப்பான் அமைதி காப்பு பணியாளர்களை திரும்ப பெறுவதன் மூலம் தெற்கு சூடான் அரசுக்கு கிடைத்து வரும் சர்வதேச நாடுகளின் ஆதரவில் ஏற்பட்டுள்ள பின்னடைவாகும்.

தெற்கு சூடான் மக்களுக்கு ஜப்பானின் ஆதரவு தொடர வேண்டும் என்று அந்நாட்ட அதிபர் கிர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். சூடானில் இருந்து தெற்கு சூடானுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு அமைதி நிலவவும், நிலையான தன்மையை ஏற்படுத்தும் வகையில் ஜப்பான் உதவிக்கரம் நீட்டியது.

ஆனால் 2013ம் ஆண்டு முதல் தெற்கு சூடானில் உள்நாட்டு பிரச்னை வெடித்து, அதிபர், துணை அதிபர் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. 2015ம் ஆண்டு சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமும், கடந்த ஜூலை முதல் மீறப்பட்டு மீண்டும் வன்முறை நடக்க தொடங்கியுள்ளது.

இந்த மோதலால் ஆயிரக்கண க்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். 3.1 மில்லியன் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஒரு லட்சம் பேர் பஞ்சத்தில் அவதிப்ப டுகின்றனர். 1 மில்லியன் பேர் பட்டினி விளிம்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.