ஜப்பானில் முரட்டு சிங்கிள்கள் காதலிக்க ஆளின்றி தவிப்பு

டோக்யோ

ப்பான் நாட்டின் திருமணமாகாத இளைஞர்கள் காதலிக்க ஆள் கிடைக்காமல் தவிப்பில் உள்ளனர்.

ஜப்பான் நாட்டில் குழந்தைகள் பிறப்பது குறைந்துக் கொண்டே வருகிறது.  கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து 10 லட்சத்துக்கு குறைவாகவே குழந்தைகள் பிறக்கின்றன.   குறிப்பாக 2018 ஆம் ஆண்டு 9,18,397 குழந்தைகள் பிறந்துள்ளன.  இதற்கு முக்கிய காரணம் பல இளைஞர்கள் திருமணம் ஆகாமல் இருப்பதே ஆகும்.

இது குறித்து அரசு எடுத்த கணக்கெடுப்பின்படி குடும்பத்தை நடத்துவதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பொறுப்பு ஏற்றுள்ளது தெரிய வந்துள்ளது.   இதனால் பல பெண்கள் திருமணத்தை தள்ளி வைத்து விட்டு பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தி ஆண்களை விட அதிக ஊதியம் பெறும் நிலையில் உள்ளனர்.

இதனால் திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் பல ஆண்களுக்கு ஊதியக் குறைவால் திருமணம் நடப்பதில்லை.   திருமணமாகாத இளைஞர்களில் பாதிக்கும் மேலோருக்கு காதலிக்கவும் பெண்கள் கிடைப்பதில்லை.   இதற்கு முக்கிய காரணம் பொருளாதார ஏற்றத் தாழ்வு என கூறப்படுகிறது.

முகநூல் போன்ற பல சமூக வலை தளங்களில் திருமணமாகாத தமிழ் இளைஞர்கள் தங்களை முரட்டு சிங்கிள் என வர்ணித்துக் கொள்வார்கள்   மேலும் பெண்கள் தங்களை காதலிப்பதாகவும் ஆனால் தாங்கள் விரும்புவதில்லை எனவும் கூறுவது வழக்கம்.     ஆனால் ஜப்பான் நாட்டு முரட்டு சிங்கிள்களுக்கு காதலிக்கவே ஆள் இல்லாத நிலை உள்ளது.