அனைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து – ஜப்பான் அரசு அறிவிப்பு

டோக்கியோ:
னைத்து குடிமக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வழி செய்யும் மசோதா ஜப்பான் ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “ அனைத்து பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் டோக்கியாவில்தான் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 6 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கொரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதார பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.