வட கொரிய ஆணு ஆயுத விவகாரம் : ஜப்பான், சீனா, தென் கொரியா கை கோர்ப்பு

--

டோக்கியோ

ட கொரியாவின் அணு ஆயுதங்களை கைப்பற்ற ஜப்பான், சீனா மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து செயல்பட உள்ளன.

கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பு கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து உச்சி மாநாடுகளை நடத்தி வருகின்றது.   ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் சுழற்சி முறைப்படி நடைபெற்று வரும் இம்மாநாட்டில் சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் கலந்துக் கொள்கின்றன.   இந்த ஆண்டின் மாநாடு இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் இம்மூன்று நாடுகளும், தங்களுக்கு இடையிலான பிரச்னைகள் பற்றியும் நட்புறவை பலப்படுத்தவும் பல தீர்மானங்கள் இயற்றின.    மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின் ஜோ அபே, சீன பிரத்மர் லீ கெகியாங், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இவர்கள் மூவரும் வட கொரியாவின் அனு ஆயுதங்களை கைப்பற்றுவது பற்றி மாநாட்டில் விவாதித்தனர்.   இந்த விவகாரத்தில் இம்மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.