கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் உயிரிழந்த ஜப்பானிய நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா…!

உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது.

சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் இப்பொழுது பற்றி பரவியுள்ளது இந்த கொடிய வைரஸ்.

இதற்கிடையில், ஜப்பானிய நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனா வைரஸ் காரணமாக இறந்துவிட்டார். ராய்ட்டர்ஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கென் ஷிமுரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 வயதாக இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையிலேயே இறந்தார். முன்னதாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் மார்க் ப்ளம் மற்றும் பாடகர் டேக்கர் ஆகியோர் கொரோனாவிலிருந்து இறந்துவிட்டனர்.