தமிழ்நாட்டில் ஜப்பானிய தொழில் நகரம்: மோடி-அபே உடன்பாடு!

காந்திநகர்,

ப்பான் பிரதமர் அபே இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது, இந்தியாவில் முதல் புல்லட் ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து காந்தியின் சபர்மதி ஆசிரமம் சென்று சுற்றிப் பார்த்தார். பின்னர் நேற்று நடைபெற்ற உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதில், இந்தியாவில் தமிழகம் உள்பட நான்கு மாநிலங்களில் ஜப்பானிய தொழில் நகரங்கள் அமைக்கப்படும் என  மோடி அறிவித்தார்.

ஜப்பான் பிரதமர் அபே தனது மனைவி மற்றும் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் குஜராத் வந்தார். அவரை வரவேற்ற மோடி, சபர்மதி ஆசிரமத்திற்கும்,  பிரசித்தி பெற்ற ஆமதாபாத் சிதி சையத் மசூதிக்கும் அழைத்துச் சென்றார்.

அதையடுத்து  குஜராத் மாநிலம் ஆமதாபாத்  மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டதிற்கு இருவரும் இணைந்து அடிக்கல் நாட்டினர்.

அதன்பிறகு, காந்தி நகரில் நடைபெற்ற இந்தியா ஜப்பான் இடையேயான 12வது உச்சி மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது இரு நாடுகளுக்கிடையே உள்ள விவகாரங்கள், மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உள்பட  பல்வேறு விஷங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,  ஜப்பான் ஆதரவுடன் ஜப்பானிய தொழில் நகரங்கள் இந்தியாவில் அமைக்கப்படும் என்றார். இதற்காக குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார்.

அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அதைத்தொடர்து இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது, தற்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் காரணமாக இந்தியா ஜப்பான் உறவு மேலும் வலுப்படும் என்றார்.

மேலும்  வடகொரியா தொடர்ந்து  அணு ஆயுதங்களை சோதனை செய்து மிரட்டி வருவதற்கு இரு நாட்டு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.