டோக்கியோ:

ரெயில் சீக்கிரமாக புறப்பட்டதற்கு ஜப்பான் ரெயில்வே நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

ரெயில்கள் தாமதமாக புறப்படுவதையும், வந்து சேருவதை தான் நாம் கேள்விபட்டிருக்கோம். ஒரு ரெயில் 20 நொடிகள் முன்கூட்டியே புறப்பட்டு சென்றதற்கு ரெயில்வே நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

ஜப்பானில் மினாமி-நாகரேயமாக இடையே இயக்கப்படும் ஒரு ரெயில் காலை 9.44 மணி 40 நொடிக்கு புறப்பட வேண்டும். கடந்த 14ம் தேதி இந்த ரெயில் 20 நிமிடங்கள் முன்கூட்டியே 9.44 மணி 20 நொடிகள் முன்னதாக புறப்பட்டு சென்றுவிட்டது.

இதற்காக இந்த ரெயிலை இயக்கி வரும் த்ஸூகுமா எக்ஸ்பிரஸ் லைன் நிறுவன நிர்வாக குழுவினர் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். ரெயில் பணியாளர்கள் புறப்படும் நேரத்தை சரியாக கணக்கிடாமல் செயல்பட்டுவிட்டனர். இனிமேல் இவ்வாறு நடக்காமல் இருக்க ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில் முன் கூட்டியே புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் ரெயிலை தவற விடும் வாய்ப்பு இருப்பதால் அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. எனினும் இந்த ரெயிலை பயணிகள் யாரும் தவறவிடவில்லை. இச்சம்பவம் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை.

ஆனால், இந்த மன்னிப்பு அறிக்கைக்கு சமூக வலை தளங்களில் நகைச்சுவையாக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பொது போக்குவரத்துக்கள் தாமதமாக இயங்கி வரும் தங்களது அனுபவத்தையும் பகிர்ந்துள்ளனர்.