டோக்கியோ:

லகின் மிகவும் வயதான நபராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 117வயது பெண்  ‘கேன் தனகா’ அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தனது  117வது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இவர் ஏற்கனவே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

தெற்கு ஜப்பான் பகுதியைச் சேர்ந்தவர் கேன் தன்கா. இவர் 1903ம்ஆண்டு பிறந்தவர். தற்போது 117 வயதாகும் தன்யா, கடந்த ஆண்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் உலகின்  மிக வயதான நபர் என உறுதிப்படுத்தப் பட்டது.

ஜப்பானில் உள்ள புகோயா பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் தன்யா,  ஜனவரி 2ந்தேதி  தனது 117வது பிறந்த நாளை  சிறப்பாக கொண்டாடினார். விருந்துடன் நடைபெற்ற அவரது பிறந்தநாள் நிகழ்ச்சி அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சி களில் ஒளிபரப்பானதாக கூறப்படுகிறது.

பிறந்தநாள் நிகழ்வின்போது, தன்யா கேக் வெட்டியதாகவும்,அவருக்கு சிறுதுண்டு கேக் கொடுக்கப்பட்டது, ஆனால், அவர் தனக்கு மேலும் சில துண்டு கேக் வேண்டும் என்று சிரித்துக்கொண்டே கூறி, கேக்கை மகிழ்ச்சியுடன் சுவைத்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.

1903ம் ஆண்டு பிறந்த தன்கா,  1922 இல் ஹீடியோ தனகாவை மணந்தார் என்றும் அவருக்கு  4 குழந்தைகள் இருப்பதாகவும் உலக சாதனை புத்தமான கின்னஸ் கூறி உள்ளது.

உலக நாடுகளிலேயே அதிக வயது வரை வாழுபவர்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில், தன்காவின் 177வயது, அங்கு வயதான மக்கள் தொகைக்கு ஓர் அடையாளம் என்றும், அதே வேளையில், தற்போது குறைந்து வரும் பிறப்பு விகிதம் எதிர்காலத்தில்  தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் எதிர்கால பொருளாதார வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்புவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஜப்பானில்  கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை  5.9% குறைந்து 900,000 க்கும் குறைந்தது  என்று ஜப்பான் அரசு தெரிவித்து உள்ளது.