ஜப்பான் யென் மதிப்பு ஏறுமுகம்…..புல்லட் ரெயில் கடன் சுமை ரூ.6,160 கோடி அதிகரிப்பு

டில்லி:

ஜப்பான் யென் மதிப்பு ஏறுமுகமாக இருப்பதால் புல்லட் ரெயில் கடன் சுமை கூடிக் கொண்டே செல்கிறது

மும்பை-அகமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் ரூ.88 ஆயிரம் கோடி ஜப்பான் அளிக்கும் கடன் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. இதை 50 ஆண்டு காலத்தில் 0.1% வட்டியுடன் இந்தியா திருப்பி செலுத்த வேண்டும். இதற்கான ஒப்பந்தம் 2017ம் ஆண்ட செப்டம்பர் 15ம் தேதி கையெழுத்தானது.

அப்போது போரெக்ஸ் சந்தை நிலவரப்படி ஜப்பானின் ஒரு யென் மதிப்பு 57 பைசாவாக இருந்தது. இது கடந்த 25ம் தேதி 61 பைசாவாக உயர்ந்துள்ளது. அதேபோல் ரூபாய்க்கு நிகரான யென் மதிப்பும் ஏறுமுகமாகவே உள்ளது.

கடந்த 10 ஆண்டில் ரூபாய்க்கு நிகரான யென் மதிப்பு 64 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2007 செப்டம்பர் 17ம் தேதி அன்று இந்திய ரூபாய்க்கு எதிரான யென் பரிமாற்ற மதிப்பு 0.3517 என்ற நிலையில் இருந்தது. 2017 செப்டம்பர் 15ம் தேதி 0.5786 என்ற நிலையில் இருந்தது.

இந்த நிலை நீடித்தால் புல்லட் ரெயில் திட்ட கடன் பல மடங்கு உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. யென் மதிப்பு அதிகரிப்பு காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தான ஒரு ஆண்டிற்குள்ளேயே கடன் மதிப்பு ரூ.6,160 கோடி அதாவது 7 சதவீதம் அதிகரிததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.