பேரரசர் பதவிவிலக அனுமதிக்கும் சட்டத் திருத்தம்: ஜப்பான் பரிசீலனை

ஜப்பான் நாட்டின் 83 வயதான பேரரசர் அக்கிஹிட்டோவை
ஜப்பான் நாட்டின் 83 வயதான பேரரசர் அக்கிஹிட்டோவை

டோக்கியோ:

ஜப்பான் நாட்டின் 83 வயதான பேரரசர் அக்கிஹிட்டோவை பதவி விலக அனுமதிப்பது குறித்தான விசயத்தில் முகாந்திரம் உள்ளதால் அனுமதிக்கலாமென ஜப்பான் அரசு அமைத்த ஆய்வுக்குழு பாராளுமன்றத்திற்கு பச்சைக் கொடிகாட்டியுள்ள்ளது.
முடியாட்சி நடைபெற்றுவறும் ஜப்பானில், 1817 ஆண்டு முதல் (1947 சுதந்திரத்திற்குப் பிறகும் மரியாதை நிமித்தமாக), பேரரசர் பதவி தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. உலகின் நீளமான தொடர்ச்சியான முடியாட்சி எனும் பாரம்பரியப் பெருமையை நிலைநிறுத்திக்கொள்ளவே இவ்வாறு தொடர்ந்து பேரரசர் பதவி பின்பற்றப்படுகின்றது. பேரரசருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்றாலும், கௌரவப் பதவியாய் நீடித்து வருகின்றார் . இவ்வைகையில், 1989 ஆம் ஆண்டு அக்கிஹிட்டோ பேரரசராகப் பதவியேற்று இன்றும் அப்பதவியிலிருந்து வருகின்றார். பேரரசர் அக்கிஹிட்டோ மற்றும் பேரரசி மிச்சிகோ ஆகியோர், அரசு விழாக்களில் சிறப்பு விருந்தினராகவும், சுதந்திர தின அணிவகுப்பு, இயற்கை பேரழிவுகளின்போது பாதிக்கப்படும் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வது போன்ற பொதுக் காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பேரரசர் அக்கிஹிட்டோ தமது வயது மூப்பை மேற்கோள்காட்டி ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தார்.
ஜப்பான் போன்றே, முடியாட்சி நடைபெறும் ஸ்பெயின், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில், சமீபத்திய ஆண்டுகளில் பேரரசர்கள் பதவியை விட்டு இறங்கி அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பளித்தாலும், ஜப்பானில் பேரரசர் பதவி துறக்கும் வழக்கம் 1817 முதலே இல்லை.
பேரரசர் விருப்பம் தெரிவித்தவுடனே, அவரைப் பதவி விலக அனுமதிப்பது குறித்து விவாதம் துவங்கி, ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. இவ்வாறு பதவி விலக அனுமதித்தால், இதுவே முன்னுதாரணமாகி, அடுத்தடுத்த தலைமுறை பேரரசர்களுக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பாகிவிடுமென அரசு கருதுகின்றது.
எனவே, பேரரசர் பதவியைத் துறக்க அனுமதிப்பது குறித்து சட்ட நெறிமுறைகளை வகுப்பதற்காக ஒரு கமிட்டியை ஜப்பான் அரசு நியமித்திருந்தது.

ஒரு தொழிலதிபர் மற்றும் நான்கு பேராசிரியர்கள் கொண்ட அந்தக் குழுவினர், “ஒருமுறை மட்டும் அமல்படுத்தக்கூடிய, பேரரசர் பதவியைத் துறக்க அனுமதிக்கும் சிறப்பு சட்ட மசோதாவை வழிமொழிந்துள்ளது. இச்சட்டம் வரும் கோடைகாலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
” 2012 ல் இதய அறுவை சிகிச்சை கொண்டிருந்த பேரரசர் அக்கிஹிட்டோ, தமது உடல்நிலை நலிவடைந்து வருவதால் 56 வயதாகும் தமது மூத்த மகன் இளவரசர் நருஹிட்டோவை அரியணை ஏற்றவிரும்புவதாக ஒரு தொலைகாட்சிப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.