டில்லி

ப்பானின் புகழ் பெற்ற பங்கு தரகு நிறுவனமான நொமுரா பாரத ஸ்டேட் வங்கிய் மற்றா வங்கிகளை விட சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 2019 உடன் முடிந்த காலாண்டில் ரு. 838.4 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. கட்னத ஆண்டு இதே கால கட்டத்தில் இந்த் வங்கி 7,718 கோடி நஷ்டத்தில் இருந்தது. இந்த வங்கியின் வாராக்கடன் விகிதங்கள் 8.71% லிருந்து 7.53 % ஆக குறைந்துள்ளது. அத்துடன் வாராக்கடன் வசூல் 3.01 % லிருந்து 3.5 ஆக உயர்ந்துள்ளது.

ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற பங்குச் சந்தை தரகு நிறுவனம் நொமுரா இது குறித்து பாரத ஸ்டேட் வங்கிக்கு பாராட்டுகளி தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் வங்கியின் பங்குகளுக்கு ரூ.470 மதிப்பு வைத்திருந்த நிலையில் அது மேலும் 38% உயர வாய்ப்புள்ளதாகவும் நெமூரா நிறுவனம் கூறுகிறது.

இந்த பங்குச் சந்தை தரகு நிறுவனம், “நாங்கள் பார்த்தவரை பாரத ஸ்டேட் வங்கியின் பங்குகள் நன்கு உயர்ந்து வருகின்றன. ஆகையால் நாங்கள் தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கிகளை விட ஸ்டேட் வங்கியின் பங்குகளுக்கு முதல் இடம் அளிக்கிறோம்.” என தெரிவித்துள்ளது.