ஜப்பானில் உள்ள ஹோக்கர்டோ தீவில் நிலநடுக்கம் – அச்சத்தால் தெருக்களில் ஓடிய மக்கள்

ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர்.

earth

ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. அதன் காரணமாக பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது.

வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்து இன்னும் தெளிவாக வெளியிடப் படவில்லை. எனினும், நிலநடுக்கத்தின் பாதிப்பு ஓரளவிற்காவது இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதே ஹோக்கய்டோ தீவில் கடந்த செப்டம்பரில் 6.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் உருவான நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைத்தன. அதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். புவியியல் ரீதியாக பார்க்கையின் ஜப்பான் பகுதியில் பூகம்ப தாக்குதல் அதிகளவில் காணப்படும் பகுதியாகவே உள்ளது. அதன் காரணமாகவே அங்கு அடிக்கடி நிலநடுகங்கள் ஏற்படுகின்றன என ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.