இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகன் சாய் புதுமையான கதை அம்சத்துடன் கூடிய ஒரு படத்தை இயக்க இருக்கிறார். ஸ்ரீ சிவாஜி சினிமாஸ் சார்பாக இப்படத்தின் தயாரிப்பாளரும் அவரே.

தமிழ்ப் புத்தாண்டன்று இப்படத்தின் பூஜை மிக எளிமையான முறையில் ஜெகன்சாய் வீட்டிலே நடைபெற்றது.

இந்தப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகவுள்ளது.

ஜெகன்சாய் ஏற்கனவே ‘ஜாஸ்மின்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். அப்படம் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள இந்த ஊரடங்கு நாட்கள் முடிந்த பின் வெளியாகும்.