மும்பை: கேரளாவுக்கு எதிரான குஜராத்தின் ரஞ்சி டிராபி ஆட்டத்தைப் பற்றிய அனைத்து பேச்சுக்களும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயத்திலிருந்து மீண்டு உடனடியாக அணிக்குத் திரும்புவதைப் பற்றியதாக இருந்தது. இருப்பினும், 26ம் தேதி தொடங்கி சூரத்தின் லாலாபாய் கான்ட்ராக்டர் ஸ்டேடியத்தில் நடைபெறும் எலைட் குரூப் ‘ஏ’ போட்டியில் பும்ரா இடம்பெற மாட்டார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

ஏறக்குறைய மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விளையாட்டுக்கு;த திரும்பும் பந்து வீச்சாளர் கேரளாவுக்கு எதிராக எலைட் குரூப் ‘ஏ’ விளையாட்டை விளையாட இந்த வாரம் சூரத்துக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். பும்ராவுக்கு “எந்த பிரச்சினையும் இல்லை” என்றாலும், தான் அணிக்குத் திரும்புவது மிகவும் பரபரப்பானதாக இருக்கக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் நம்பினார். அதற்கு பதிலாக, 2020 ஜனவரி முதல் தொடங்கி நீண்ட ஆண்டு முழுவதுமான கிரிக்கெட்டுக்கு தன்னை நல்ல நிலையில் வைத்துக் கொள்வதே அவரது நோக்கம்.

பந்து வீச்சாளர் தனது கவலைகளை சவுரவ் கங்குலி மற்றும் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டதாக அறியப்படுகிறது, மேலும் இருவரும் தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினர். குஜராத் கேப்டன் பார்த்திவ் படேலும் சூரத்தில் பும்ரா விளையாட மாட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.

பும்ரா காயத்திலிருந்து மீண்டு வருவதால், போட்டியின் போது ஒரு நாளில் நான்கு முதல் எட்டு ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என்று தேசிய தேர்வுக் குழு குஜராத் அணி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால் குஜராத் அணி நிர்வாகம் தேசிய தேர்வாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை, ஏனெனில் ஒரு நாளில் அதிகபட்சம் எட்டு ஓவர்கள் மட்டுமே வீசும் ஒரு பந்து வீச்சாளரைக் கொண்டு விளையாடுவது அணிக்கு எந்த வகையிலும் உதவாது என்று அவர்கள் உணர்ந்தனர்.

பின்னர் கங்குலி நெறிமுறையை ஒதுக்கி வைத்து பும்ராவை தனது ஓய்வைத்  தொடர அனுமதித்தார். வேகப்பந்து வீச்சாளர் இப்போது இலங்கைக்கு எதிரான டி 20 சர்வதேச தொடரில் நேரடியாக விளையாடுவார்.