39 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா – ஒரே இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றி 39 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மண்ணில் ஒரே ஆண்டில், ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.

india

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் 7விக்கெட் இழப்பிறு 443 ரன்களை எடுத்த இந்திய அணி போட்டியை டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியது.

இறுதியாக 3வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் பும்ரா சிறப்பாக பந்து வீசி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் பிறகு ஆஸ்திரேலிய அணி பாலோ ஆன் பெற்ற போதும், இந்திய அணி 292 ரன்கள் என்ற இமாலய முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் 45 விக்கெட் வீழ்த்திய பும்ரா முதலிடம் பிடித்தார். இதற்கு முன்னதாக கடந்த 1979ம் ஆண்டில் இந்திய வீரர் திலீப் தோசி, அறிமுகமான ஆண்டில் 40 விக்கெட் கைபற்றியதே சாதனையாக இருந்தது. கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் நீடித்த இந்த சாதனையை பும்ரா இன்று தகர்த்துள்ளார்.

அறிமுகமான ஆண்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதலிடமும், திலீப் தோசி 2ம் இடத்திலும், வெங்கதேஷ் பிரசாத் மூன்றாவது இடத்திலும், நானேந்திர ஹிர்வானி 4வது இடத்திலும் உள்ளனர்.

இதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா மண்ணில் ஒரே ஆண்டில், ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் கைப்பற்றிய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையையும் பும்ரா பெற்றார்.