ஜெயம் ரவியின் ’கோமாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்…!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் படம் கோமாளி.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க ஐசரி கணேசன் தயாரிக்கும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, ஆதிவாஷி, பிரிட்டிஷார் காலத்து அடிமை உள்ளிட்ட 9 வேடங்களில் நடிக்கிறார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் வளர்ச்சியும், அதன் பாதிப்புகளையும் நகைச்சுவையாக பேசும் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: jayam ravi, Kajal Agarwal, komali
-=-