பிஎம் நரேந்திரமோடி படத்துக்கு பாட்டே எழுதாத என் பெயரை எப்படி போட்டார்கள்?: பழம்பெரும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அதிர்ச்சி

மும்பை:

பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தின் போஸ்டரில், பாட்டே எழுதாத என் பெயரை எப்படி போட்டார்கள் என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார் பழம்பெரும் பாடலாசிரியர் ஜாவேந் அக்தர்.


விவேகானந்தன் ஓபராயின் பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் ஏப்ரல் 5-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.  இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது.

இதற்கான போஸ்டரில் ஒரு பாடலை எழுதியதாக பழம்பெரும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தார் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜாவேத் அக்தார், தமது ட்விட்டர் பதிவில், எந்த பாடலும் எழுதாத போது, என் பெயர் போஸ்டரில் இடம்பெற்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ட்விட்டர் பதிவை ஜாவேத் அக்தரின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான சப்னாஹாஸ்மி ரீட்விட் செய்துள்ளார்.

 

You may have missed