நடிகை கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்த பிரபல கவிஞர் : நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்தார்….

 

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து தொலைக்காட்சிகளுக்கு நடிகை கங்கனா சில வாரங்களுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார்.

அப்போது, இந்தி சினிமாவில் பிரபலமாக விளங்கும் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பெயரை, இந்த தற்கொலை விவகாரத்தில் இழுத்திருந்தார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அக்தர், மும்பை அந்தேரியில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கடந்த மாதம் கங்கனா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

“டி.வி.க்களில் கங்கனா தெரிவித்த கருத்து தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவேண்டும்” என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது புகாருக்கு ஆதாரமாக எழுத்துப்பூர்வமான சில தகவல்களை அக்தர் நேற்று, தனது வழக்கறிஞர் மூலம், நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 19 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

– பா. பாரதி

You may have missed