கொரோனா பாதிப்பால் காய்கறி விற்கும் பிரபல நடிகர்….!

கொரோனா வைரஸ் ​​பல கலைஞர்களின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது.

தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாவேத் ஹைதர் காய்கறி விற்கும் தொழிலில் இறங்கியுள்ளார்.

நடனமாடி, பாடல் பாடி காய்கறி விற்கும் அவரது வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜாவேத் நிலை குறித்து அவரது ரசிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

“ஜாவேத் ஹைதர் ‘பாபர்’ (2009) மற்றும் தொலைக்காட்சி தொடரான ​​’ஜென்னி அர் ஜுஜு’ (2012) ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். ‘லைஃப் கி ஐசி கி டீசி’ படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .