பாடப்புத்தகத்தில் நேரு படம் அகற்றப்பட்டு ஆர்எஸ்எஸ் தலைவர் படம் இணைப்பு: கோவா மாநில அரசு நடவடிக்கை

பனாஜி:

கோவா மாநிலத்தில் 10ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நேரு படம் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக ஆர்எஸ்எஸ் தலைவர் வீர் சவர்க்கர் படம் இணைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநில அரசின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்தெரிவித்து உள்ளது.

கோவா மாநில 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த  நேரு படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ்., இணை நிறுவனரும், சுதந்திர போராட்ட வீரருமான வீர் சவர்க்கார் படம் இடம்பெற்றுள்ளது.

இந்த புத்தகத்தின் 68-வது பக்கத்தில் மகாத்மா காந்தி, மவுலானா ஆசாத்துடன் நேரு அமர்ந்தி ருக்கும் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. தற்போது அந்த படத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தற்போது வீர் சவர்க்கர் படத்தை போட்டு பிரிண்ட் செய்து மாநில அரசின் கல்வித்துறை  புதிய பதிப்பை வெளியிட்டுஉளளது. ள்ளது. இது சர்ச்சையை எழுப்பி உள்ளது.