அஞ்சலியுடன் காதல், இஸ்லாம் மதத்திற்கு மாறியது என்று எப்போதும் சர்ச்சைகளின் நாயகனாக வலம் வருபவர் ஜெய் ,

அஞ்சலியுடனான காதல் மற்றும் கல்யாணத்தை புரளி என மறுத்திருக்கும் ஜெய், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் .

கடந்த 7 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருவதாக கூறியிருக்கும் ஜெய், இஸ்லாம் மதத்திற்கு மாறினாலும் இதுவரை தனது பெயரை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறாராம் .விரைவில் தனது பெயரை அஜீஸ் ஜெய்னு மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார் .