கொரோனாவால் பிரபல நடிகை ஜெயா பட்டாச்சாரியா மரணம்… பரவிய வதந்தி….!

 

உலகம் முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியில் பிரபல சின்னத்திரை நடிகையான ஜெயா பட்டாச்சாரியா கொரோனாவால் மரணமடைந்து விட்டதாக செய்தி பரவியது.

இந்நிலையில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் உயிருடன் தான் இருக்கிறேன். இப்படி பதிவிடும் முன்பு தீர விசாரித்து பதிவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.