ஜெ.சொத்து குவிப்பு வழக்கு நீதிபதி: மைக்கேல் டி குன்கா ஐகோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு!

பெங்களூரு,

மிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு நீதிபதியான மைக்கேல் டி குன்கா கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மைக்கேல் டி குன்கா
மைக்கேல் டி குன்கா

செர்த்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக மைக்கேல் டி.குன்கா நியமிக்கப்பட்டார்.

விசாரணை முடிவில், ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதா வுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து அதிரடியான தீர்ப்பு வழங்கினார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில், சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த குன்கா தற்போது கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.