மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவின் உணவு செலவு ரூ.1.17 கோடி!

சென்னை:

டல்நலம் இல்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை குறித்த கட்டணத்திற்கான பில், ஆறுமுக சாமி  விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில், ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சமயத்தில், அதிமுக அமைச்சர்களும், சசிகலா குடும்பத்தினரும் வகை வகையாக தின்று தீர்த்த செலவு மட்டும் 1 கோடியே 17 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உடல் நலக் குறைவால் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி நள்ளிரவு  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, 2016 ம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி உயிரிழந்தார்.

சுமார் 75 நாட்கள் அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செலவு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

ஜெ. சிகிச்சை மற்றும் அவரது மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கட்டண விவரத்தில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து, அவர் இறந்தது வரை, 6 கோடியே, 85லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய் (6,85,69,584) என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், மருத்துவமனையின் நிர்வாக செல்வு மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான செலவு என்று ஒரு தொகையும், சிறப்பு மருத்துவர் ரிச்சர்டு பீலே மற்றும் மவுன்ட் எலிசபெத் மருத்துவர்கள் வந்த சிகிச்சை அளித்த வகையில் பல கோடி செலவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையின் ஜெ. தங்கியிருந்த ரூம் வாடகை 1 கோடியே, 24 லட்சத்து, 79ஆயிரத்து நூறு  என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல மருந்து செலவு ரூ.1.92 கோடி செலவு ஆனதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

இதில் வேடிக்கை மற்றும் அதிர்ச்சியூட்டும்  செய்தி என்ன  வென்றால், ஜெ. சிகிச்சையின்போது உணவுக்கான செலவு மட்டும் 1 கோடியே 17 லட்சத்து 4ஆயிரத்துரு 925 ரூபாய்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேலையிலேயே அவரை காண வந்தவர்களும், அதிமுக அமைச்சர்களும், சசிகலா குடும்பத்தினரும் அப்போலோவின் முகாமிட்டு,  தின்று தீர்த்த செலவு மட்டுமே 1.17 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த செலவுக்கான தொகை அதிமுக கட்சியில் இருந்து செலுத்தப்பட்டு உள்ளது என்று குறிப்பிடப்ட்டுள்ளது. முதல் கட்டமாக 41லட்சம் அளவுக்கு கொடுக்கப்பட்ட தாகவும், பின்னர் 2வது கட்டமாக 6 கோடி கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபோக  பாக்கி   44 லட்சத்துக்கு 56 ஆயிரத்து, 280 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.