சென்னை

விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் ராஜேந்திரன் மரணத்தை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற இருந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்ப்பட்டுள்ளன.

நாளை அதாவது பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. அதை ஒட்டி தமிழகம் எங்கும் பல நிகழ்வுகள் அதிமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழாக்கள் அந்தந்த தொகுதி சட்டப்பேரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் நடத்தப்பட இருந்தது.

இந்நிலையில் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ் ராஜேந்திரன் இன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். அவர் சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த போது அவர் வந்த வாகனம் திண்டிவனம் அருகே சாலை தடுப்பில் மோதியதில் அவரும் அவருடன் பயணம் செய்தவர்களும் படுகாயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் ராஜேந்திரன் உயிர் இழந்தார். இது அதிமுகவினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தமிழக அமைச்சர் சிவி சண்முகம் ராஜேந்திரனின் மரணத்தை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்திஃப்ல் நடக்க இருந்த ஜெயலலிதா பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகலை ஒத்தி வைத்துள்ளார்.

இது குறித்த உத்தரவை அமைச்சர் சிவி சண்முகம் அந்தந்த தொகுதி சட்டபேரவை உறுப்பினர்களுக்கும்  மற்றும் மாவட்ட அதிமுக நிர்வாகிக்ளுக்கும் அளித்துள்ளார்.