சென்னை:
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்,  போயஸ்கார்டனில் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு  பொதுகமக்களின் பார்வைக்காக ராஜாஜி ஹாலுக்கு கொண்டுசெல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. .

எம்.ஜி.ஆர். சமாதி
எம்.ஜி.ஆர். சமாதி

தமிழகத்தில் 6வது முறையாக பதவி வகித்து வந்த ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு அடுத்ததாக தொடர்ந்து இரண்டு முறை தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆவார். மேலும் பதவியில் இருக்கும் போது இறந்த தமிழக முதல்வர்களில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆருக்கு அடுத்து மூன்றாவதாக பதவியின் போதே இறந்தவர் ஜெயலலிதா தான்.
கடந்த இரண்டரை மாதங்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்ததது
இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார் என்று அப்போலோ நிர்வாகம் அதிகார பூர்வமாக அறிவித்தது.
அப்போதில் இருந்து அதிமுக தொண்டர்கள்  கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் குவிந்த  வண்ணம் இருந்தனர். அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் போயஸ் கார்டனுக்கு முதல்வரின் உடல் கொண்டுசெல்லப்பட்டது.
அங்கு தற்போது இறுதிச்சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பிறகு ராஜாஜி  ஹாலில் முதல்வரின் உடல் மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்படுகிறது.