சென்னை,

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, “துக்ளக்” வார இதழின் முன்னாள் அதிபர் மற்றும் ஆசிரியர் சோ ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அந்தணர் முன்னேற்ற கழக தலைவர் ஜெயபிரகாஷ் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

“புரட்சிதலைவி ஜெ ஜெயலலிதா அம்மா, சாணக்கியர் சோ ஆகியோர்  அப்போலோவில் அடுத்த அடுத்த நாட்களில்  திட்டமிட்டு கொலைசெய்யபட்டுள்ளார்கள் என்பதே என் தனிபட்ட எண்ணம் சந்தேகம்.

புரட்சிதலைவியால் இன்று MLA MP ஆக இருக்ககூடிய அதிமுக வை சேர்ந்த ஒருவர்கூட அப்போலோவில் செப்டம்பர் 22 முதல் டிசம்பர் 5 வரை என்ன நடக்கிறது என்ற உண்மையை வெளிபடுத்த கோரி  அப்போது குரல் கொடுக்கவில்லை:  எதிர்த்து போராடவில்லை.

மத்திய அரசும் அன்றும் இன்றும் கண்டுகொள்ளவில்லை.

இருவரின் மரணம் குறித்து சாதரண என் போன்றவர்களுக்கே சந்தேகம் வரும்போது  மத்திய உளவுதுறைக்கு தெரியாமலா இருக்கும்?   அனைத்தும் தெரிந்திருக்கும்.

கவர்னர், மத்திய அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்களால் கூட புரட்சித் தலைவியை சந்திக்கமுடியவில்லை. அப்படியென்றால் தடுத்த சக்தி  எது?  அதிகாரம் மிக்க இவர்கள் உண்மையை மக்களுக்கு ஏன் கூறவில்லை? மத்திய அரசு இப்போதாவது சிபிஜ விசாரனை வைத்திருக்கலாமே! நீதிமன்றம் வேடிக்கைபார்த்தது பார்ப்பது ஏன்?

தானே முன்வந்து நீதிமன்றம் மக்களின் சந்தேகத்தைப் போக்க மாநில முதல்வரின் உடல் நிலை பற்றி அறிக்கை கேட்டிருக்கலாமே!  அனைவரும் இன்றுவரை மௌனமாக இருக்க காரணம் என்ன?

உண்மையை வெளிகொணரவேண்டிய ஊடகங்களும் பேசாமல் இருக்ககாரணம் என்ன?

புரட்சிதலைவி அம்மாவால் அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி.,  மேயர், சேர்மேன் உட்பட  பல பதவிகளையைம் பொறுப்புகளையும் பெற்று வாழ்தவர்கள் லட்சகணக்கில் இருக்கிறார்கள். ஆனால் இந்தக் கூட்டம்  இன்றுவரை நன்றிமறந்து பதவி பணத்திற்காக அலைகிறார்கள்.

புரட்சிதலைவி அம்மா அவர்கள் இவர்களின் நடிப்பை உண்மையென நம்பி துரோகிகளை தோழி என நம்பி சிலசந்தர்ப்ப சூழ்நிலையில் சிக்கிகொண்டார்.

தான்பிறந்த அந்தணர் குலத்திற்கு எதிராக ஜெயலலிதா செயல்பட்டாரே ஒழிய நல்லது ஒன்றும் செய்யவில்லை.  ஆனாலும் பிராம்மண விரோதிகள் பெரும்பாலானோர்  புரட்சிதலைவி இருந்தவரை   பிராம்மணர்களை வம்பிழுப்பது சொத்தை அபகரிப்பது மிரட்டுவது தாக்குவது போன்றசெயல்களை செய்ய அஞ்சினர்.

மேலும் பிராம்மணர்கள்மீதான தாக்குதல் அதிகம் இல்லை. ஆகவே நம் இனத்தவர் அவரை  ஆதரித்தோம். ஆகையால் தமிழக பிராம்மணர்கள் மாநிலத்தில் அதிமுக மத்தியில் பாஜக என்று வாக்களித்துவந்தனர்.

ஒருவேளை புரட்சிதலைவி அம்மா தான் பிறந்த குலத்திற்கு ஏதாவது நல்லவிசயம் செய்திருந்தால் –  பிராம்மணர்களை அருகில்வைத்திருந்தால் – அரசியலில் முன்னிலைபடுத்தியிருந்தால் -கொலைசெய்யபட்டிருக்கமாட்டார். உயிரோடு இருந்திருப்பார்.  கூடா நட்பு உயிரையே பறித்துவிட்டது

மர்மமாய் கொலைசெய்யபட்டு  பிராம்மணர் சமுதாயபடி அடக்கம் செய்யாமல் அவரை அநாதையாக ஆக்கிவிட்டனர். அவரால் பயனடைந்த நன்றி கெட்ட கூட்டம் வாய்திறக்க மறுக்கிறது,

மத்திய அரசு அதிகாரிகள் முன்னிலையில் புரட்சிதலைவி உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும். அவரது  உடலை உறவினர்களிடமோ பிராம்மணர் சமுதாயத்தவரிடமோ ஒப்படைத்து பிராம்மண சமுதாய வழக்கபடி இறுதி கர்மகாரியங்கள் நடக்கவேண்டும்.

மேலும் ஜெயலலிதா, சோ  ஆகியோரின் மர்ம மரணம் குறித்து சி.பி.ை. விசாரிக்க வேண்டும்” என்று ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.